உள்ளூர் செய்திகள்

கங்கோத்திரியிலிருந்து நடைபயணமாக ராமேஸ்வரம் செல்லும்சிவனடியார்குழுவினர் எல்.என்.புரத்தில் இரவு தங்கி ஆசி வழங்கினர்.

பண்ருட்டியில் சிவனடியார் குழுவினருக்கு வரவேற்பு

Published On 2023-09-07 12:11 IST   |   Update On 2023-09-07 12:11:00 IST
  • நடைபயண குழுவினரை திருவதிகை திருநாவுக்கரசர் திலகவதியார் அன்னதான திருதொண்டு சிவனடியார்கள் வரவேற்ற னர்.
  • 4 மணி அளவில் நடை பயணத்தை தொடர்ந்தனர்.

கடலூர்:

உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்திரியில் இருந்து நடைபயணமாக ராமேஸ்வரம் செல்லும் சிவனடியார் குழுவினர் நேற்று பண்ருட்டிக்கு வருகை தந்தனர். நடைபயண குழுவினரை திருவதிகை திருநாவுக்கரசர் திலகவதியார் அன்னதான திருதொண்டு சிவனடியார்கள் வரவேற்ற னர். பண்ருட்டி- சென்னை சாலை எல்.என்.புரத்தில் சிவ தொண்டர் ஒருவர் வீட்டில் இரவு தங்கி சிவபூஜைசெய்தனர். பின்னர் அதிகாலை 3 மணி அளவில் குளித்துபூஜை முடித்து4 மணி அளவில் நடை பயணத்தை தொடர்ந்தனர்.

Tags:    

Similar News