உள்ளூர் செய்திகள்
அலைடு சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டிற்கு வீகனெக்ட் விருது: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார்
- சேலம், புதுச்சேரி, மாமல்லபுரம் அடுத்த பையனூர் என மூன்று இடங்களில் இந்த கல்வி நிறுவனம் உள்ளது
- உயிர் காக்கும் பணிக்கான கல்வி, பயிற்சி தகுதிகளை முன்வைத்து விருது வழங்கப்பட்டது.
மாமல்லபுரம்:
விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் சார்பில் 2004ம் ஆண்டு அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை, இரண்டு படிப்புகளுடன் 20 மாணவர்களை வைத்து அதன் நிறுவனர் சண்முக சுந்தரம் துவங்கினார். சேர்மன் கணேசனின் தொடர் முயற்சியில், கல்லூரி முதல்வர் மருத்துவர் செந்தில்குமாரின் செயல்பாட்டால் தற்போது சேலம், புதுச்சேரி, மாமல்லபுரம் அடுத்த பையனூர் என மூன்று இடங்களில் பல படிப்புகளுடன், ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
கல்லூரியின் கட்டமைப்பு, புதிய மருத்துவ பாடத்திட்டங்கள், கல்விமுறை, கருவிகள், சமூக பொறுப்புகள், மருத்துவ சேவைகள் உள்ளிட்ட உயிர் காக்கும் பணிக்கான கல்வி, பயிற்சி தகுதிகளை முன்வைத்து 2022ம் ஆண்டுக்கான "வீகனெக்ட்" விருது அலைடு சயின்ஸ் துறைக்கு வழங்கப்பட்டது. விருதை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார்.