உள்ளூர் செய்திகள்

உடைப்பு ஏற்பட்டுள்ள குழாய்.

ராதாபுரம் அருகே குழாய் உடைப்பால் குடிநீர் விநியோகம் பாதிப்பு- கிராம மக்கள் தவிப்பு

Published On 2023-04-18 08:21 GMT   |   Update On 2023-04-18 08:21 GMT
  • இண்டர்நெட் கேபிளுக்காக சாலை ஓரத்தில் குழி தோண்டும் பணி நடைபெற்றது.
  • 10 நாட்களாக சீலாத்திகுளம் கிராமத்திற்கு குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது.

வள்ளியூர்:

ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்ட சீலாத்திகுளம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 3 இடங்களில் குடிநீர் குழாய் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சமூகரெங்கபுரத்தில் இருந்து சீலாத்திகுளம் செல்ல கூடிய சாலை ஓரத்தில் இண்டர்நெட் கேபிளுக்கு குழி தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது தாமிரபரணி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது.

இதுகுறித்து தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் தற்போது வரை குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யவில்லை. இதனால் 10 நாட்களாக சீலாத்திகுளம் கிராமத்திற்கு குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. கோடைகாலம் தொடங்கி விட்டதால் குடிநீர் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். விரைவில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வழங்கவில்லை என்றால் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்த போவதாக தெற்கு ஒன்றிய செயலாளர் காமராஜ் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News