உள்ளூர் செய்திகள்

தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் குடிநீர் தட்டுப்பாடு

Published On 2023-09-16 15:18 IST   |   Update On 2023-09-16 15:18:00 IST
  • இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்வதற்காக வருகை தந்தார்.
  • கோவிலின் அருகே உள்ள கடைகளில் ரூ.20, ரூ.30 கொடுத்து குடிநீர் வாங்கி குடித்தனர்.

அரூர்,  

தருமபுரி மாவட்டம் அரூரில் பிரசித்தி பெற்ற தீர்த்தமலைக்கோவில் உள்ளது. தீர்த்தமலை கோவிலுக்கு நேற்று முன்தினம் இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்வதற்காக வருகை தந்தார். அமைச்சரின் வருகையை ஒட்டி இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் அவசர அவச ரமாக குடிநீர் வழங்கும் சுத்திகரிப்பு எந்திரம் பொருத்தப்பட்டது.

அமைச்சரின் வருகை–யின்போது அமாவாசை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராள மான பக்தர்கள் வருகை தந்தனர். பக்தர்கள் வருகை தந்தாலும் பக்தர்க ளுக்காக கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டனர்.

அமைச்சரின் வருகை–யால் திடீரென்று சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் யாருக்கும் தெரியாமல் பொருத்தபட்டதால் பக்தர்கள் அனைவரும் குடிநீர் இன்றி தவித்து வந்த நிலையில் கோவிலின் அருகே உள்ள கடைகளில் ரூ.20, ரூ.30 கொடுத்து குடிநீர் வாங்கி குடித்தனர்.

அமைச்சரின் வரு கைக்காக ஏற்படுத்தப்––பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் தற்காலி–கமாக பொருத்தப்பட்டதால் நிரந்தரமாக சுத்திகரிக்கப்–பட்ட குடிநீர் மற்றும் அடிப்–படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் பக்தர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிரந்தரமாக வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Similar News