உள்ளூர் செய்திகள்

முல்லைபெரியாறு அணை

பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு திறக்கும் தண்ணீரின் அளவு மேலும் குறைப்பு

Published On 2022-08-13 10:46 IST   |   Update On 2022-08-13 10:46:00 IST
  • முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை கடந்த 3 நாட்களாக குறைந்து வருகிறது.
  • நீர் வரத்து குறைந்ததால் கேரளாவுக்கு திறக்கப்படும் உபரி நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

கூடலூர்:

முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை கடந்த 3 நாட்களாக குறைந்து வருகிறது. நீர் வரத்து குறைந்ததால் கேரளாவுக்கு திறக்கப்படும் உபரி நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

நேற்று அணைக்கு நீர் வரத்து 2872 கன அடியாக இருந்தது. இதனால் கேரளாவுக்கு வெளியேற்ற ப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 700 கன அடியாக குறைக்கப்பட்டது. பெரியாறு அணையில் உபரி நீர் வெளியேற்றத்து க்காக திறக்கப்பட்ட 13 மதகுகளில் 10 மதகுகள் முழுமையாக அடைக்கப்ப ட்டு விட்டன.

3 மதகுகள் மட்டுமே 1 அடி உயரம் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்ற ப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 138.15 அடியாக உள்ளது. வரத்து 2770 கன அடி. இதில் தமிழக பகுதிக்கு 2194 கன அடி நீரும், கேரள பகுதிக்கு 576 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 6660 மி.கன அடியாக உள்ளது.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 68.90 அடியாக உள்ளது. வரத்து 2080 கன அடி. திறப்பு 3094 கன அடி. இருப்பு 5546 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி. வரத்து 46 கன அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 126.34 அடி. வரத்து 15 கன அடி, திறப்பு 3 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.

Tags:    

Similar News