உள்ளூர் செய்திகள்

ஓகேனக்கல் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2023-09-01 15:37 IST   |   Update On 2023-09-01 15:37:00 IST
  • உபரி நீரானது 4,000 கன அடியிலிருந்து 9,279 கன அடியாக வெளி யேற்றப்பட்டு வருகிறது.
  • சினி அருவி , ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல்,

தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வெளியேற் றப்படும் உபரி நீரானது 4,000 கன அடியிலிருந்து 9,279 கன அடியாக வெளி யேற்றப்பட்டு வருகிறது.

இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படு கிறது. இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று நிலவரப்படி 4,000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போதைய நிலவரப்படி 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்த நீர் வரத்து காரணமாக மெயின் அருவி, சினி அருவி , ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Tags:    

Similar News