உள்ளூர் செய்திகள்

புல்லாவெளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.

புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் கன மழையால் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

Published On 2022-11-14 10:52 IST   |   Update On 2022-11-14 10:52:00 IST
  • புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்கிறது.
  • இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அருவிக்கு வந்து ஆனந்தமாக குளித்து செல்வார்கள். ஆனால் தற்போது வனத்துறை தடை விதித்துள்ளதால் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் அழகை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள பெரும்பாறை, கானல்காடு, தடியன்குடிசை, பெரியூர், குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள மலை கிராமங்களில் கடந்த 1 வாரமாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

இதனால் மலை பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஊற்றுகள் ஏற்பட்டு அங்கு சிறு அருவிகளாக தோன்றி உள்ளது. இதனால் தண்ணீர் அதிக அளவு பெருக்கெடுத்து செல்கிறது.

பெரும்பாறை அருகே இயற்கை எழில் மிகுந்த புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்கிறது.

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிக அளவு ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஏற்கனவே ஆத்தூர் காமராஜர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி விட்ட நிலையில் தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குடகானறு அணைக்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வழக்கமாக புல்லாவெளி அருவியில் தண்ணீர் அதிகரிக்கும் சமயங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். குறிப்பாக இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அருவிக்கு வந்து ஆனந்தமாக குளித்து செல்வார்கள். ஆனால் தற்போது வனத்துறை தடை விதித்துள்ளதால் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் அழகை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News