உள்ளூர் செய்திகள்

பள்ளிக்குள் புகுந்த மழைநீர்.

ஆண்டிபட்டியில் கொட்டி தீர்த்த கனமழையால் பள்ளிக்குள் புகுந்த தண்ணீர் -மாணவ-மாணவிகள் தவிப்பு

Published On 2023-10-13 13:25 IST   |   Update On 2023-10-13 13:25:00 IST
  • ஆண்டிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது.
  • சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மழைநீர் புகுந்ததால் மாணவ-மாணவிகள் அவதியடைந்தனர்.

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன்சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சிலநாட்களாக கடும் வறட்சி நிலவி வந்தது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஆண்டி பட்டி, பாலகோம்ைப, புள்ளிமான்கோம்பை, கதிர்நரசிங்கபுரம், ஜம்புளிபுத்தூர், சண்முகநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கனமழை காரணமாக கால்நடைகளுக்கு தீவனதட்டுப்பாடும் நீங்கும் என அவர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர். இந்நிலையில் ஆண்டிபட்டி அருகில் உள்ள சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் மழைநீர் புகுந்தது.

இந்த பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரால் வகுப்பறைக்குள் செல்ல முடியாமல் அவ ர்கள் சிரமம் அடைந்தனர். ஓரத்தில் கற்களை அடுக்கி வைத்து வகுப்பறைக்குள் சென்றனர். பள்ளி மைதானத்தில் நடைபெறும் காலை பிரார்த்தனை ரத்து செய்யப்பட்டது.

மழைநீர் அகற்றப்படாத தால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பள்ளியில் ஒவ்வொரு முறையும் கனமழை காலங்களில் வளாகத்தில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மழைநீர் தேங்காத வகையில் வடிகால்கள் அமைத்து மாணவர்களுக்கு சுகாதார மான வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதேபோல் அருகில் உள்ள உயர்நிலைப்பள்ளி விளையட்டு மைதானத்தி லும் இன்று மழை நீர் தேங்கி இருந்ததால் மாணவ-மாணவிக்ள சிரமம் அடைந்தனர்.

Tags:    

Similar News