வீராணம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடலுக்கு செல்வதை படத்தில் காணலாம்.
வீராணம் ஏரியில் இருந்து வீணாக வெளியேறும் தண்ணீர்விவசாயிகள் அதிர்ச்சி:
- வீராணம் ஏரியில் இருந்து வெள்ளியங்கால் ஓடை வழியாக கடலுக்கு வீணாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சிஅடைந்தனர்
- இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளதுஇந்த ஏரிக்கு பருவமழை பெய்யும் நேரங்களிலும், மேட்டூர் அணை தண்ணீர் மூலமும் நீர் வரத்து இருக்கும். கடந்த ஆண்டு பருவ மழை அதிகரித்ததால் வீராணம் ஏரி 6 முறை நிரம்பி வழிந்தது.தற்ேபாதும் ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கி றது.
சுமார் ஒரு வாரகா லமாக 47.50 அடியாக நீடித்தது. இந்த நிலையில் வீராணம் ஏரியில் இருந்து வெள்ளியங்கால் ஓடை வழியாக கடலுக்கு வீணாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வீராணம் ஏரி நிரம்பினால் அருகில் உள்ள கிராமங்களில் நீர்மட்டம் கணிசமாக உயரும். ஆனால், தற்ேபாது அதிகாரிகள் ஏரியில் உள்ள தண்ணீரை வீணாக கடலுக்கு திறந்து விடுகின்றனர். இதனால் ஏரியில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.இன்று காலை 8 மணி நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.95 அடியாக உள்ளது. ஏரிக்கு 334 கனஅடி நீர் வருகிறது. சென்னை மாநகர் குடிநீருக்காக 65 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.