வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியுடன், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகளையொட்டி, விண்ணப்பித்திருந்த விண்ணப்பதாரர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று, ஆவணங்களை சரிபார்த்து, ஆய்வு மேற்கொண்டார்.
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு
- இல்லங்களுக்கு நேரில் சென்று, ஆவணங்களை சரிபார்த்து, ஆய்வு மேற்கொண்டார்.
- தேர்தல் துணை தாசில்தார்கள், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தேர்தல் ஆணையத்தால் நியமிக்க ப்பட்டுள்ள, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் தமிழ்நாடு கைவினை மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் ஷோபனா, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்ட ருமான ஜெயசந்திரபானு ரெட்டியுடன், வேப்பனப்ப ள்ளி சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட மேலுமலை, சூளகிரி மற்றும் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோமநாதபுரம், கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகளையொட்டி, விண்ணப்பித்திருந்த விண்ணப்பதாரர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று, ஆவணங்களை சரிபார்த்து, ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க, 1.1.2023-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள், 18 வயது நிறைவடைந்து நாளது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் 17 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளும் வகையில் நவம்பர் 9-ந் தேதி முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1880 வாக்கு சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 75,824 விண்ணப்பங்கள் வரபெற்றன.
பெறப்பட்ட விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக கள விசாரணை மேற்கொண்டு, தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார், தாசில்தார்கள் அனிதா, சம்பத் மற்றும் தேர்தல் துணை தாசில்தார்கள், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.