உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு முதல்வர் கிருஷ்ணமூர்த்தி சான்றிதழ்கள் வழங்கினார். 

தேசிய அளவிலான வணிகவியல் கருத்தரங்கு

Published On 2022-09-01 08:42 GMT   |   Update On 2022-09-01 08:42 GMT
  • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தேசிய அளவிலான வணிகவியல் கருத்தரங்கு நடந்தது.
  • கோவை பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியர் செல்லசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் முதுகலை வணிகவியல் துறையின் சார்பில் '' நிலையான, உலகளாவிய வணிகம்- தற்போதைய போக்குகள், சவால்கள்'' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு 2 நாட்கள் நடந்தது.

ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் வரவேற்றார். முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். துணை முதல்வர்கள் பாலமுருகன், முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினர்.

துணைத்தலைவி அமுதாராணி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். கோவை பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியர் செல்லசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அவர் பேசுகையில், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பல்வேறு சவால்களாக மூலதனம், தொழிலாளர்கள், சந்தைப்படுத்துதல், தொழில் நுட்பம் போன்றவற்றை பட்டியலிட்டு, அந்த சவால்களை தங்களுக்கான வாய்ப்பாக மாற்றி கொள்வதற்கு தேவையான அறிவுரையை வழங்கினார். மேலும் சிறு, குறு தொழில்கள், நிறுவனங்கள்தான் இந்தியாவை உலகளவில் முதல் இடத்திற்கு கொண்டு செல்லும் என்றார்.

மற்றொரு சிறப்பு விருந்தினராக பெங்களூர் ஜெயின் பல்கலைகழகத்தின் முதுகலை வணிக நிர்வாகவியல் துறை இணைப்பேராசிரியர் யவனராணியை, உதவி பேராசிரியர் சரஸ்வதி அறிமுகம் செய்தார்.

2-ம் நாள் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற பெங்களூர் கிரீஸ்ட் பல்கலைக்கழக வணிக வியல் துறை இணை பேராசிரியர் சுரேசை, உதவி பேராசிரியர் சதீஷ்குமாரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக மேலாண்மை துறை பேராசிரியர் விஜயதுரையை, உதவி பேராசிரிரயர் தங்கபாண்டிஸ்வரியும் அறிமுகப்படுத்தினர்.

நிறைவு விழாவில் துறைத்தலைவி அமுதாராணி வரவேற்றார். ெநல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை க்கழகத்தின் மேலாண்மை துறை உதவி பேராசிரியர் மாரிமுத்து பேசினார்.

கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு முதல்வர் கிருஷ்ணமூர்த்தி சான்றிதழ்கள் வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் நன்றி கூறினார். இதில் 7 மாவட்டங்களில் உள்ள 10 கல்லூரிகளில் இருந்து 256 மாணவர்கள் பங்கேற்று ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

Tags:    

Similar News