உள்ளூர் செய்திகள்
பேரணியை நகரசபை துணைத்தலைவர் செல்வமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.




வீடுதோறும் தேசிய கொடி விழிப்புணர்வு பேரணி

Published On 2022-08-13 14:10 IST   |   Update On 2022-08-13 14:10:00 IST
  • ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடுதோறும் தேசிய கொடி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
  • பேரணியை நகரசபை துணைத்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள் பங்கேற்ற வீடுதோறும் தேசிய கொடி விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஆண்டாள் கோவில் முன்பு, பேரணியை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமையில், நகர்மன்றத் துணைத் தலைவர் செல்வமணி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

வட்டாரக்கல்வி அலுவலர் மலர்கொடி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை முன்னிலை வகித்தனர். ஆசிரியப் பயிற்றுநர் செல்வம் வரவேற்றார். பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியே வந்து மீண்டும் ஆண்டாள் சன்னதியை அடைந்தது. இதில் 11 குறுவள மையங்களைச் சேர்ந்த சுமார் 300 தன்னார்வலர்கள் சீருடை அணிந்து, தேசியக் கொடியை ஏந்தி அணிவகுத்து வந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா தமிழ் வழி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர்11குறுவளமையதன்னார் ஒருங்கிணைப்பா–ளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தன்னார்வலர் ஒருங்கிணைப்பாளர்கள் லாவண்யாதேவி, சூர்யா, சித்ரா, நிரோஷா, அமுதவல்லி, சுமதி, கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தன்னார்வலர் சிவகாமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News