உள்ளூர் செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

Published On 2023-08-28 06:38 GMT   |   Update On 2023-08-28 06:38 GMT
  • திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

வேளாண் துறையின் கீழ் விவசாயத்தில் ஆர்வமுள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு அவர்களது திறனை மேம்படுத்தி உள்ளூரிலேயே வேலைவாய்ப்புகள் உருவாக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 28 ஊரக இளைஞர்களுக்கு காளான் வளர்ப்பு என்ற தலைப்பில் தொழில்நுட்ப பயிற்சி 28.8.23 முதல் 2.9.23 வரை 6 நாட்கள் அருப்புக்கோட்டையில் உள்ள கோவிலாங்குளம் நிலையத்தில் வேளாண் அறிவியல் பயிற்சி நடைபெற உள்ளது.

இந்த பயிற்சியில் கலந்து கொள்ள தகுதியான விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பயிற்சிக்கு 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் கல்வி தகுதி குறைந்தது 5ம் வகுப்பு மேல் படித்தவராகவும், கற்றுக்கொண்ட தொழில் நுட்பங்களை செயல்படுத்துவதில் ஆர்வமுடையவராகவும் இருக்க வேண்டும்.

இப்பயிற்சியானது வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் காளான் தொழில் முனைவோர் ஆகியோர் மூலம் வழங்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் உழவர் பயிற்சி நிலையம், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் அவர்களை தொடர்பு கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொண்டு புதிய தொழில் முனைவோராக மாறிட, வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News