உள்ளூர் செய்திகள்

கிராமிய நடன கலைஞர்களுக்கு கலை விருதுகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார். அருகில் கலெக்டர் ஜெயசீலன், எம்.எல்.ஏ. சீனிவாசன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் உள்ளனர்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகம் வாசித்து பழக வேண்டும்-அமைச்சர் பேச்சு

Published On 2023-11-17 08:12 GMT   |   Update On 2023-11-17 08:12 GMT
  • விருதுநகரில்2-வது புத்தக திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
  • நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகம் வாசித்து பழக வேண்டும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விழாவில் பேசினார்.

விருதுநகர்

விருதுநகரில்2-வது புத்தக திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். சீனிவாசன் எம்.எல்.ஏ., சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்தார்.

பின்னர் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில் பரதநாட்டியம், சிலம்பம், தப்பாட்டம், ஓவியம், நாதஸ்வரம், கரகாட்டம், தெருக்கூத்து, வாய்ப்பாட்டு, நாடகம், கிராமிய பாடல், மரக்கால் ஆட்டம், தவில், ராஜா ராணி ஆட்டம், தவில், வில்லிசை, எருது கட்டும் மேளம் உள்ளிட்ட கலை களில் சிறந்து விளங்கிய மொத்தம் 30 கலை ஞர்களுக்கு 2022-23-ம் ஆண்டு மற்றும் 2023-24-ம் ஆண்டுக்கான கலை இளமணி, கலை வளர்மணி, கலைச்சுடர்மணி, கலை நன்மணி, கலை முதுமணி ஆகிய விருதுகள், பொற்கிழிகளை அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் 2-வது முறையாக கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள பொருட் காட்சி மைதானத்தில் 16.11.2023 முதல் 27.11.2023 வரை 12 நாட்களுக்கு மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. நமக்கு பொது அறிவு, பழைய நினைவுகள், நிகழ்ச்சிகள், புதிய கவிதைகள் இதெல்லாம் கிடைப்பதற்கு புத்தகங்கள் தான் சரியான ஒரு தேர்வு ஆகும். பய ணங்களின் போதும், நேரம் கிடைக்கும் போதெல் லாம் புத்தகங்கள் வாசித்து பழக வேண்டும்.இப்புத்தக திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. இதில் பல்வேறு துறைகள் சார்ந்த புத்தகங்கள், போட்டித்தேர்வு வழிகாட்டி புத்தகங்கள், பாடநூல் புத்தகங்கள் என, லட்சக் கணக்கான புத்த கங்கள் குவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாரம்பரிய இசைப் பொருட்கள் கண் காட்சி, அறிவோம் பயில் வோம் பயிலரங்கம், தொல்லியல் துறை மூலம் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக் கப்பட்ட தொல் பொருட்களின் கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது. அனைவரும் இந்த புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு, புத்த கங்களை வாங்கி பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், திட்ட இயக்குநர் தண்டபாணி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், விருது நகர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி ராஜ சேகர், சிவகாசி மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ் பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News