மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பயனாளிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
- பயனாளிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வேலாயுதபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமில் இலவச வீட்டுமனை பட்டா 50 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்து 60 ஆயிரத்து 300 மதிப்பிலும், முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற விதவை உதவித்தொகை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் 46 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 மதிப்பிலான உதவி தொகைகளும், 105 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளையும், 4 பயனாளிகளுக்கு புதிய மின் னணு குடும்ப அட்டைகளும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 240 மதிப்பி லும், வேளாண்மை-உழவர் நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.7 ஆயிரத்து 430 மதிப்பிலும், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.71 ஆயிரத்து 200 மதிப்பி லும் என மொத்தம் 216 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 88 ஆயிரத்து 170 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவி களை கலெக்டர் ஜெய சீலன் வழங்கினார்.
முகாமில் அருப்புக் கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் சங்கர் நாராயணன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) யசோதாமணி, கலுசிவலிங்கம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.