உள்ளூர் செய்திகள்

வி.ஓ.ஏ.க்கள் அதிரடி மாற்றம்

Published On 2023-07-01 08:35 GMT   |   Update On 2023-07-01 08:35 GMT
  • வி.ஓ.ஏ.க்கள் அதிரடி மாற்றப்பட்டுள்ளனர்.
  • தங்களது அலுவலகங்களில் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வருவாய் வட்டத்தில் ஒரே இடத்தில் ஓராண்டு முதல் மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர்களை பணியிடை மாற்றம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் திருச்சுழி வட்டத்தில் பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர்களை பொது மாறுதலில் பணியிட மாற்றம் செய்வது குறித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த

28 -ந்தேதி அருப்புக் கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சொந்த விருப்பத்தின் பேரில் பணியிைட மாற்றம் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

அதனடிப்படையில் திருச்சுழி வருவாய் வட்டத்தில் பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர்களான கேசவன் (கீழக்கண்டமங்கலம்), பால்ச்சாமி (மாயலேரி), முத்தையா (புல்வாய்க்கரை), சரவணக்குமார் (திருச்சுழி), தென்னரசு (ஆதித்தனேந்தல்), மும்தாஜ் பேகம் (பூம்பிடாகை), சந்தன மாரியம்மாள் (சென்னிலைக்குடி), குணசுந்தரி (தேளி), கண்ணன் (உ.கிடாக்குளம்), பொன் கருப்பசாமி (வேளானூரணி), ஞானசெல்வம் (எம்.புதுக்குளம்), கார்த்திகேயன் (ரெகுநாதமடை), ராஜகுரு (எருமைக்குளம்) ஆகிய 13 கிராம நிர்வாக அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கணேசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது அவரவர் சொந்த விருப்பத்தின் பேரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் இன்று தங்களது அலுவலகங்களில் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News