உள்ளூர் செய்திகள்

ஓராண்டாக பயன்பாட்டிற்கு வராத நகர்ப்புற நல வாழ்வு மையம்

Published On 2023-06-04 08:11 GMT   |   Update On 2023-06-04 08:11 GMT
  • நகர்ப்புற நல வாழ்வு மையம் ஓராண்டாக பயன்பாட்டிற்கு வரவில்லை.
  • சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நகர்ப்புறங் களில் இலவச அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ சோதனை, தாய் சேய் சுகாதார சேவைகள் மற்றும் அடிப்படை மருத்துவ சேவைகளுக்காக குடியிருப்புகளுக்கு அருகில் நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி ஸ்ரீவில்லி புத்தூர் நகராட்சி இடைய பொட்டல் தெருவில் பொது மக்களின் வசதிக்காக நகர்ப்புற நல வாழ்வு மையம் அமைப்பதற்கு 2021 -22 நிதியாண்டிற்கான மத்திய நிதி குழு மானிய நிதியில் ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்காக இடையபொட்டல் தெருவில் உள்ள நகராட்சி சுகாதார வளாகம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, நகர்ப்புற நல வாழ்வு மையம் கட்டப்பட்டது.

இந்த நிலையில் கட்டு மான பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், ஓராண்டாகியும் நல வாழ்வு மையம் திறக்கப்படாமல் உள்ளது. இதனை உடனடி யாக திறக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News