உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட ராசு

கிராம சபை கூட்டத்தில் விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளரின் ஆதரவாளர் கைது

Published On 2023-10-06 07:53 GMT   |   Update On 2023-10-06 07:53 GMT
  • கிராம சபை கூட்டத்தில் விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளரின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.
  • இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் குளம் ஊராட் சிக்கு உட்பட்ட கங்கர் குளத்தில் காந்தி ஜெயந்தியை யொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஊராட்சி செயலாளரின் பதவி காலம் குறித்து விவசாய சங்க பிரதிநிதி அம்மையப்பன் கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி செயலாளர் தங்க பாண்டியன், அம்மை யப்பனை காலால் எட்டி உதைத்தார். அவருக்கு ஆதரவாக தேவேந்திரபுரத்தை சேர்ந்த ராசு (42) என்பவர் அவரது கண்ணத்தில் அறைந்தார்.

மான்ராஜ் எம்.எல்.ஏ., வட்டார வளர்ச்சி அலுவலர் முன்பாக இந்த சம்பவம் நடந்ததால் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து தங்க பாண்டியனின் ஊராட்சி செயலாளர் பதிவியில் இருந்து பணி யிடை நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டார். இந்த சம்பவம் குறித்து வன்னி யம்பட்டி போலீசில் அம்மையப்பன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தங்கபாண்டியன் மற்றும் ராசுவை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ராசுவை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். ேமலும் தலைமறைவாக உள்ள தங்கபாண்டியனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News