உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராஜராஜன் ஆறுமுகத்துக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

என்ஜினீயரிங் மாணவர்களுக்கான கருத்தரங்கம்

Published On 2022-06-18 08:39 GMT   |   Update On 2022-06-18 08:39 GMT
  • என்ஜினீயரிங் மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது.
  • பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார்.

சிவகாசி

சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் துறையின் ஐ.இ.டி.இ. மாணவர் சங்கம் சார்பில் ''என்ஜினீயரிங் மாணவர்ளுக்கான செயற்கை நுண்ணறிவியல் துறையில் உள்ள வாய்ப்புகள்'' என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது.

பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம் தொடக்க உரையாற்றினார். டீன் மாரிச்சாமி சிறப்புரையாற்றினார்.

மின்னணுவியல் துறைத்தலைவர் வளர்மதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், என்டர்ஜி நிறுவனத்தின் ஆலோசகர் ராஜராஜன் ஆறுமுகம் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், மாணவர்கள் தமது துறைசார்ந்த வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும்.

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப துறையானது மிகவும் வளர்ந்து வரும் நிலையில், மாணவர்கள் அதில் தங்களை தகுதிப்படுத்துவதற்கு தேவையான மென்பொருள் பற்றிய விழிப்புணர்வும், செயற்கை நுண்ணறிவின் வேலைப்பாடு, செயல்முறை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு ஆங்கில புலமை மிகவும் அவசியம் என்றார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், மின்னணுவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் ஐ.இ.டி.இ. மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், கார்த்திகேயன், பேராசிரியர் தனம் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News