உள்ளூர் செய்திகள்

விழாவில் டி.எஸ்.பி. பிரித்தி பேசினார்.

தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி பாராட்டு

Published On 2023-01-29 13:31 IST   |   Update On 2023-01-29 13:31:00 IST
  • தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி டி.எஸ்.பி. பிரித்தி பேசினார்.
  • நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் 78-வது ஆண்டு விழா நடந்தது.

ராஜபாளையம்

ராஜபாளையம் ெரயில்வே பீடர் ரோட்டில் உள்ள கிருஷ்ணம ராஜபாளையம் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட நாடார்மேல்நிலைபள்ளி கலையரங்கத்தில் நாடார் தொடக்கப்பள்ளி, நாடார் மேல்நிலைப்பள்ளி, நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் 78-வது ஆண்டு விழா நடந்தது.

நாடார் தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளின் செயலர் விஜயராஜன், மெட்ரிக் மேல்நிலைபள்ளி செயலர் ஆத்தியப்பன் வரவேற்று பேசினார். உறவின்முறைத் தலைவர் ஆதவன் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உறவின்முறை செயலர் வெற்றிசெல்வன், பொரு ளாளர் பெரியசாமி, தர்மகர்த்தா மதிபாலன், உதவி தலைவர் வடமலையான், காரியதரிசி நாகரத்தினம், இணைத்தலைவர் மதிப்பிர காசம் முன்னிலை வகித்தனர்.

விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் ஞான கவுரி, சிவகாசி மாவட்ட கல்வி அலுவலர் ராஜா, ராஜபாளையம் வட்டார கல்வி அலுவலர் முத்து ராமலிங்கம், ராஜபாளையம் டி.எஸ்.பி. பிரித்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் உதவி வன பாதுகாவலர் வேல்மணி நிர்மலா, ராஜபாளையம் வன சரக அலுவலர் சக்திபிரசாத் கதிர்காமன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 5, 10, 12 ஆகிய வகுப்புகளில் அரசுப் பொதுத்தேர்வில் பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவியர்களை பாராட்டி தங்கப்பதக்கம் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

பின்னர் விழா மேடையில் சிறப்பு விருந்தினர்களுக்கும் தங்க பதக்கம் மற்றும் சிறப்புப் பரிசுகள் வழங்கிய நன்கொடை யாளர்களுக்கும், உறவின்முறை நிர்வாகி களுக்கும், நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் உறவின்முறை சார்பில் பொன்னாடை அணி விக்கப்பட்டது.

நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், ெதாடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சுமதி ஆண்டறிக்கையினை சமர்ப்பித்தனர். மாணவ- மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழா நிகழ்ச்சிகளை தமிழாசிரியர்கள் லதா, பிச்சாண்டி,சொர்ணலதா கருப்பசாமி தொகுத்து வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் கணேசன், நவநீதகிருஷ்ணன், பேச்சி யம்மாள் செய்திருந்தார்கள்.

முடிவில் நாடார் மேல்நிலைபள்ளி உதவி தலைமை ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News