உள்ளூர் செய்திகள்

மழைநீர் அகற்றும் பணியை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

தேங்கிய மழைநீரை அகற்ற தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. நடவடிக்கை

Published On 2022-11-05 09:47 GMT   |   Update On 2022-11-05 09:47 GMT
  • தேங்கிய மழைநீரை அகற்ற தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுத்தார்.
  • தரைபாலத்தை நேரடி கண்காணிப்பில் நகராட்சி எடுத்து கொண்டு துரித நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படும்.

மழைநீர் அகற்றும் பணியை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- சத்திரப்பட்டி ரோட்டில் ெரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்திரப்பட்டி ரோட்டில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள், 50-க்கும் மேற்பட்ட நூற்பாலை மற்றும் விசைத்தறி கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் கணபதியாபுரம் ெரயில்வே தரைபாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

மழையால் ெரயில்வே தரை பாலத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பள்ளி மாணவர்கள், மில் தொழிலா ளர்கள் உரிய நேரத்துக்கு பள்ளிக்கும், வேலைக்கும் செல்ல முடியா மல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதனை கேள்விப்பட்ட ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாம்ராஜா ஆகியோர் நேரில் ஆய்வு செய்து ராட்சத மின்மோட்டார்களை வர வழைத்து தேங்கிய மழைநீரை துரிதமாக வெளியேற்றி பாதையை ஒழுங்குபடுத்தினர்.

நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் அதி காரிகளுடன் ஆலோசனை நடத்தி மழைநீர் வெளியேறி செல்லும் நீரோடையின் அடைப்பை நீக்கி மழைநீர் தங்குதடையின்றி செல்ல உரிய நடவடிக்கைகளை எடுத்தனர்.

இதுகுறித்து எம்.எல்.ஏ. வும், நகரசபை தலைவரும் கூறுகையில், மேம்பால பணிகள் நிறைவடையும் வரை மழை காலங்களில் கணபதியாபுரம் ெரயில்வே தரைபாலத்தை நேரடி கண்காணிப்பில் நகராட்சி எடுத்து கொண்டு துரித நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ள ப்படும்.

மாணவர்கள், மில் தொழிலாளர்கள் இனி அச்சமின்றி கணபதியாபுரம் தரைபாலத்தை கடந்து செல்ல வழிவகை செய்து தரப்படும் என்றனர்.

Tags:    

Similar News