உள்ளூர் செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை கூட்டத்தில் தலைவர் தங்கம் ரவி கண்ணன் பேசினார்.

நகரசபை கூட்டத்தில் 64 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Published On 2022-08-26 14:13 IST   |   Update On 2022-08-26 14:13:00 IST
  • ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை கூட்டத்தில் 64 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
  • முடிவில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர சபை கூட்டம் தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் நடந்தது. முதல் தீர்மானமாக சுமார் 125 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியின் மக்கள் சேவை பணிகளை 2022- 23-ம் ஆண்டுக்கான தமிழக அரசால் சிறந்த முதல் நகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு ஊக்கத்தொகை ரூ.15 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர், திருநெல்வேலி நகராட்சி மண்டல இயக்குநர், விருதுநகர் மாவட்ட கலெக்டர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியின் உள் மற்றும் வெளி அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் 63 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் செல்வமணி, ஆணையாளர் ராஜமாணிக்கம் பொறியாளர் தங்கபாண்டியன், மேலாளர் பாபு, சுகாதார ஆய்வாளர் சந்திரா, சரவணன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

Tags:    

Similar News