புதிய மருத்துவ கட்டிடங்களை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
ரூ.3½ கோடி மதிப்பிலான புதிய மருத்துவ கட்டிடங்கள்: அமைச்சர்கள் திறப்பு
- விருதுநகர் மாவட்டத்தில் ரூ.3½ கோடி மதிப்பிலான புதிய மருத்துவ கட்டிடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
- முதல்-அமைச்சர் இந்த மருத்துவத் துறையை சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ரூ.25 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவமனை புதிய ரத்த வகை கட்டிடம், 4 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.170 லட்சம் மதிப்பில் புதிய கட்டிங்கள், 6 துணை சுகாதார நிலையங்களில் ரூ.160 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் என மொத்தம் ரூ.3½ கோடி மதிப்பில் மருத்துகட்டிங்கள் கட்டப்பட்டுள்ளது.
இதற்கான திறப்பு விழா செங்குன்றாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கபாண்டியன், ரகு ராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய கட்டிடங்களை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், மா.சுப்பிர மணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் அவர்கள் பேசிய தாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் ரூ.3½ கோடி மதிப்பில் புதிய மருத்துவ கட்டிடங்கள் கட்டப்பட்டு திறக்கப் பட்டுள்ளன. முதல்-அமைச்சர் இந்த மருத்துவத் துறையை சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.
விருதுநகர் மாவட்டம் மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தில் 2,61,828 முதல் சேவை பெட்டகங்களையும், 8,28,971 தொடர் சேவை பெட்டகங் களையும் வழங்கி இத் திட்டத்தில் 100 சதவிகித இலக்கை நோக்கி மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டு கொண்டி ருக்கின்றது.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதில் மருத்துவ கல்லூரி டீன் சங்குமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.