ராஜபாளையம் யூனியன் அலுவலகம் கட்டும் பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பூமிபூைஜ செய்து தொடங்கி வைத்தார். அருகில் கலெக்டர் மேகநாதரெட்டி, தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. உள்ளனர்.
யூனியன் அலுவலகத்திற்கு ரூ.3.41 கோடியில் புதிய கட்டிடம்
- ராஜபாளையம் யூனியன் அலுவலகத்திற்கு ரூ.3.41 கோடியில் புதிய கட்டிடத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
- மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், சம்மந்தபுரம் கிராமத்தில் ரூ.3.41 கோடி மதிப்பில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது.
கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். தனுஷ் குமார் எம்.பி., ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரா ட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு நிதி திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது.
பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாகவும் பல்வேறு நிதித்திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல துறைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அரசு அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
அதன்படி, ரூ.341.50 லட்சம் மதிப்பில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் சக்திமுருகன், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர்(பொறுப்பு) அனிதா, ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சிங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.