உள்ளூர் செய்திகள்

கலசலிங்கம் பல்கலைக்கழகம் 35-வது இடம் பெற்று சாதனை

Published On 2022-07-17 08:29 GMT   |   Update On 2022-07-17 08:29 GMT
  • கலசலிங்கம் பல்கலைக்கழகம் 35-வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
  • என்.ஐ.ஆர்.எப். தர வரிசைகளை வழங்கி வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

மத்திய கல்வி அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் கற்பித்தல், கற்றல் வளம், ஆராய்ச்சி ெதாழில்முறை பயிற்சி, பொதுமக்களின் கருத்து ஆகியவற்றை கொண்டு என்.ஐ.ஆர்.எப். தர வரிசைகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசையில் தேசிய அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகம் 35-வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதேபோல் இந்தியாவின் பொறியியல் பிரிவில் 35-வது இடத்தையும், அனைத்து பிரிவுகளில் 50-வது இடத்தையும் பிடித்துள்ளது. பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன், இணை வேந்தர் அறிவழகி, துணைத்தலைவர்கள் சசிஆனந்த், அர்ஜூன் கலசலிங்கம் ஆகியோர் இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், டீன்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களை பாராட்டினர்.

Tags:    

Similar News