உள்ளூர் செய்திகள்

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சந்தித்து தேசியக்கொடி வழங்கினார்.

தமிழகத்தில் விரைவில் மாற்றங்கள் வரும்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி

Published On 2022-07-27 08:51 GMT   |   Update On 2022-07-27 08:51 GMT
  • தமிழகத்தில் விரைவில் மாற்றங்கள் வரும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி அளித்துள்ளார்.
  • இந்துக்கள் நடத்தும் பள்ளிகளில் தவறு நடந்தால் சூறையாடப்படுகிறது.

ராஜபாளையம்

ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானாவில் சென்னை மாகாண முதல்வராக இருந்த குமாரசாமி ராஜா சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

விஷ்வ இந்து பரிசத் அமைப்பின் தலைவர் சரவண கார்த்திக், மாநில துணை தலைவர் குணசீலன், மாவட்ட தலைவர் லெனின், மாவட்ட அமைப்பாளர் சிவா, அமைப்பு குழு தலைவர் பொன்னுச்சாமி, வடக்கு ஒன்றிய தலைவர் சிவசக்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய சுதந்திர அமுத விழாவை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் ஜூலை-15 முதல் ஆகஸ்டு 15 வரை சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளை போற்றும் வகையில் நினைவிடங்களில் மரியாதை செய்து வருகிறோம்.

முன்னாள் சென்னை மாகாண முதல்வர் பி.எஸ். குமாரசாமிராஜா பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆசிரியர்களை மிரட்டும் நோக்கத்துடன் செயல் படுபவதை கைவிட வேண்டும். இந்துக்கள் நடத்தும் பள்ளிகளில் தவறு நடந்தால் சூறையாடப்படுகிறது. கிறிஸ்தவர்கள் நடந்தும் பள்ளிகளில் தவறு நடந்தால் யாரும் கண்டு கொள்வதில்லை.

சபாநாயகர் அப்பாவு அனைத்து மதத்தினருக்கும், அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவானவர். அவர் கிறிஸ்தவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மற்ற மதத்தினரை படிப்பறிவு இல்லாதவர்கள் என கூறுவது நல்லதல்ல.

தமிழகம் முழுவதும் பா.ஜ.க., இந்து அமைப்புகள் நடத்துகிற நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி மறுப்பது, தடை விதிப்பது நல்லதல்ல. எங்களுடைய கருத்துரிமை, பேச்சுரிமையை பறிக்க கூடாது. எங்கள் மீது தடைகள் விதிப்பதை ஜனநாயக முறைப்படி எதிர்கொள்வோம். தமிழகத்தில் வெகு சீக்கிரத்தில் மாற்றங்கள் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News