உள்ளூர் செய்திகள்

குணசேகரன் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கியபோது எடுத்த படம்

சரித்திரப் பாதை கருத்தரங்கு

Published On 2023-07-30 05:57 GMT   |   Update On 2023-07-30 05:57 GMT
  • சமூக நீதியின் சரித்திரப் பாதை என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
  • 11 ஆயிரத்து 500 மருத்துவ கல்லூரி இடங்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளன.

விருதுநகர்

விருதுநகர் அரசு மருத்து வக் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற, தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்பு ரை நிகழ்ச்சியில், ஊடக வியலாளர் குணசேகரன் சமூக நீதியின் சரித்திரப் பாதை என்ற தலைப்பில் பேசினார்.

பின்னர் அவர் கூறியதா வது:-

உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக் கை இந்திய அளவில் 27 விழுக்காடாக இருக்கும் போது தமிழ்நாட்டில் அது 52 விழுக்காடாக இருக்கிறது என்றும், ஒட்டுமொத்த சமூக விழிப்புணர்வு அனை வருக்கும் கல்வி, அனைத்து சமூகத்தினருக்கான விழிப் புணர்வு ஏற்படுத்தியதன் மூலம் இந்த வெற்றி பெறப் பட்டது. அந்தக் காலத்தி லேயே தோள் சீலைப் போராட்டம் குறித்து கூறி அதற்கான வரலாற்று நிகழ்வுகளை மாணவர் களுக்கு எடுத்துரைத்தார்.பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மாவட்டத் திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற நிலை உருவாவதற்கு அரசு பெரும் முயற்சி எடுத்து இன்றுவரை அதைக் கடைப்பிடித்து வருவதாக கூறினார். ஏறத்தாழ 11 ஆயிரத்து 500 மருத்துவ கல்லூரி இடங்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளன.பள்ளித் தேர்வுகளில் எப்போதுமே விருதுநகர் மாவட்டம், முதல் இடத்தில் இருக்கிறது என்றால் அதற்கு கல்விக்கு இங்கு கொடுக்கப் படுகின்ற முக்கியத்துவம் தான் காரணம். அதுபோல இன்று நமக்கு கிடைத்திருக்கக் கூடிய சமூக நீதி என்பது கடந்த ஒரு நூற்றாண்டாக பல்வேறு தலைவர்களால் கிடைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, தமிழ்நாட்டில் குக்கிராமங்களிலும் படிப்பு அறிவை வழங்கியதன் மூலம் கிராமத்தில் இருந்து இளைஞர்கள் படித்து பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். ஒரு சமூகம் முன்னேற வேண்டுமென்றால் கல்வி, சுகாதாரம், மனிதவள குறியீடு ஆகியவற்றில் முன்னோடியாக இருந்தால் மட்டும்தான் முன்னிலை அடைய முடியும்.

தமிழகம் உயர்கல்வி பயில்வதில் இந்தியாவி லேயே முதன்மை இடத்தில் உள்ளது என்றால், சாதாரண மனிதருக்கும் தரமான கல்வி என்ற சமூக நீதியின் கொள்கையால் வந்தது தான் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்குமணி, தனி துணை கலெக்டர் (சமூக பாது காப்புத்திட்டம்) அனிதா, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பிரியதர் ஷினி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்ரா மசுப்பி ரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டி செல்வன், மாவட்ட நூலக அலுவலர் சுப்பிர மணியன், கல்லூரி முதல்வர் குணசேகரன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாண வியர்கள், அரசு அலுவலர் கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News