- அரசு பள்ளி ஆண்டு விழாவில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
- விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதி சுந்தரராஜபுரம் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினனர். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசும்போது, கணபதி சுந்தர நாச்சியார்புரம், முத்துச்சாமியாபுரம் ஊராட்சி காமராஜர் நகர் மற்றும் கோதை நாச்சியார்புரம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படுள்ளது என்றார். விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட அலுவலர் வித்யா, தலைமை ஆசிரியர் சாந்தி, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, ஒன்றிய துணை செயலாளர் மலர்மன்னன், கிளை செயலாளர்கள் கருணாகரன், பாலமுருகன், கனகராஜ், மாடசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.