உள்ளூர் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி பிரதிஷ்டை பூஜை

Published On 2023-08-06 05:41 GMT   |   Update On 2023-08-06 05:41 GMT
  • விநாயகர் சதுர்த்தி பிரதிஷ்டை பூஜை நடந்தது.
  • மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் நற்பணிமன்ற தலைவர் ராமராஜ் செய்திருந்தார்.

ராஜபாளையம்

ராஜபாளையத்தில் ஒவ்வொரு வருடமும் மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் நற்பணிமன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெறும்.இந்த ஆண்டு 36-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ராஜபாளையம்-மதுரைரோட்டில் உள்ள மாயூரநாதசுவாமி கோவில் முன்புள்ள ஆதிவழிவிடும் விநாயகர் கோவில் வளாகத்தில் சிலை செய்வதற்கான பிரதிஷ்டை பூஜை நடைபெற்றது. திருவாடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாச்சாரியார் பூஜையை நடத்தி வைத்தார்.

இதில் முக்கிய பிரமுகர்கள், பிரபல தொழில் அதிபர் குவைத்ராஜா மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் நற்பணிமன்ற தலைவர் ராமராஜ் செய்திருந்தார்.

Tags:    

Similar News