100 பேருக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி
- நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் 100 பேருக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி நடந்தது.
- வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ பயிற்சியில் சேர்ந்த 100 பேருக்கும் பழகுநர் உரிமம் வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் 100 பேருக்கு இலவச ஓட்டுநர், பழகுநர் உரிமம் வழங்கப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ தலைமை வகித்தார். போக்குவரத்து ஆய்வாளர் பூர்ணலதா முன்னிலை வகித்தார். மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 20 முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இலவச கார் ஓட்டுநர் பயிற்சி அளித்து உரிமம் வழங்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த 30 பெண்கள், 70 ஆண்கள் என 100 பேருக்கு ஓட்டுநர் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ பயிற்சியில் சேர்ந்த 100 பேருக்கும் பழகுநர் உரிமம் வழங்கினார். சக்தி சரவணா ஓட்டுநர் திறன் மேம்பாட்டு பயிற்சி மைய நிர்வாக இயக்குநர் முத்துவேல் நன்றி கூறினார்.