உள்ளூர் செய்திகள்

சீட்டு கம்பெனியில் சேர கொடுத்த ஆவணங்களை பயன்படுத்தி மோசடி

Published On 2023-01-05 13:43 IST   |   Update On 2023-01-05 13:43:00 IST
  • ரூ.8 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 4 பேர் மீது புகார் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • சீட்டு கம்பெனியில் சேர கொடுத்த ஆவணங்களை பயன்படுத்தி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

விருதுநகர்

விருதுநகர் சுப்பையா தெருவை சேர்ந்தவர் காளீஸ்வரி (வயது 35). இவரது கணவர் ஜெயக்குமார். சீட்டு கம்பெனியில் வேலை பார்க்கும் ரோசல்பட்டியை சேர்ந்த புவனேசுவரி என்ற பெண், காளீஸ்வரிக்கு அறிமுகமாகி உள்ளார். அவர் காளீஸ்வரியிடம் ஆசைவார்த்தை கூறி சீட்டு திட்டத்தில் சேர வைத்துள்ளார்.

அதற்காக ஆதார், ரேசன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை காளீஸ்வரி கொடுத்துள்ளார். அந்த திட்டத்தில் 3 மாதங்கள் மட்டும் பணம் கட்டி விட்டு நிறுத்தி விட்டார். இந்த நிலையில் ரூ.8 லட்சம் சீட்டு பணம் பெற்று திரும்ப செலுத்தாமல் உள்ளதாக அந்த சீட்டு கம்பெனியில் இருந்து காளீஸ்வரிக்கு தகவல் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த கம்பெனிக்கு சென்று விசாரித்துள்ளார். அங்கு காளீஸ்வரி பெயரில் வங்கி கணக்கு ஒன்றில் 2 திட்டங்களில் ரூ.8 லட்சம் பரிமாற்றம் செய்துள்ள தகவல்களை தெரி வித்துள்ளனர்.

இந்த நிலையில் குறிப்பிட்ட வங்கிக்கு சென்று விசாரித்தபோது அங்கு காளீஸ்வரி பெயரில் கணக்கு தொடங்கப்பட்டு ரூ.8 லட்சம் பெறப்பட்டு அந்த கணக்கு மூடப்பட்டு விட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து விருதுநகர் மேற்கு போலீசில் சீட்டு கம்பெனியில் சேர கொடுத்த ஆவணங்களை பயன்படுத்தி பணம் மோசடி செய்துள்ளதாக புவனேசுவரி, அழகர்சாமி, முருகானந்தம், மணிமாறன் ஆகிய 4 பேர் மீது காளீஸ்வரி புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News