உள்ளூர் செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் வி.பி.எம்.எம். கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அன்னை ெதரசா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கலா கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய காட்சி. அருகில் கல்லூரி சேர்மன் வி.பி.எம்.சங்கர், தாளாளர் பழனிசெல்வி சங்கர், துணைத்தலைவர் தங்கபிரபு, சிந்துஜா தங்கபிரபு, கல்லூரி இயக்குனர் நாச்சியார் கண்ணன் ஆகியோர் உள்ளனர்.

தரமான கல்வியை கற்பதற்காக தமிழகத்திற்கு வெளிமாநில மாணவர்கள் வருகிறார்கள்

Published On 2023-10-30 08:31 GMT   |   Update On 2023-10-30 08:31 GMT
  • தரமான கல்வியை கற்பதற்காக தமிழகத்திற்கு வெளிமாநில மாணவர்கள் வருகிறார்கள்.
  • மாணவ, மாணவிகள் படிக்கும்போது, நல்ல முைறயில் படிக்க வேண்டும். அதன் மூலம் பல்வேறு துறைகளில் சாதிக்க வேண் டும்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ் ணன்கோவில் வி.பி.எம்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழா வுக்கு கல்லூரி சேர்மன் வி.பி.எம்.சங்கர் தலைமை தாங்கினார். தாளாளர் பழனிசெல்வி சங்கர் முன் னிலை வகித்தார்.

மாணவிகளுக்கு பட்டம்

கல்லூரி துணைத்தலை வர் தங்க பிரபு, சிந்துஜா தங்கபிரபு ஆகியோர் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றனர். விழாவில் அன்னை ெதரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந் தர் டாக்டர் கலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 1,500 மாணவிக ளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப் போது அவர் பேசியதாவது:-

பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவிக ளுக்கு பட்டம் வழங்குவத மிகவும் பெருமையாக உள் ளது. மேலும் இந்த கல்லூரி மாணவிகள் பல்கலைக்கழக அளவில் தேர்வில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர்.

தரமான கல்வி

இந்தியாவில் உள்ள மாநி லங்களில் தமிழகத்தில் கல் வியின் தரம் சிறப்பாக உள் ளது. எனவே பல்வேறு மாநி லங்களில் இருந்தும், பல் வேறு நாடுகளில் இருந் தும் இந்த தரமான கல்வியை கற்பதற்காக தமிழகத்தை நோக்கி மாணவ, மாணவி கள் வருகிறார்கள்.

எனவே தரமான கல் வியை ஆசிரியர்கள் மாண–வர்களுக்கு போதிக்க வேண் டும். கல்வி கற்பதன் மூலம் மட்டுமே ஒரு உண்மையான, தெளிவான சமுதாயத்தை உருவாக்க முடியும். ஆகவே மாணவ, மாணவிகள் படிக்கும்போது, நல்ல முைறயில் படிக்க வேண்டும். அதன் மூலம் பல்வேறு துறைகளில் சாதிக்க வேண் டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பட்டமளிப்பு விழாவில், கல்லூரி இயக்குனர் நாச்சியார் கண்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து
கொண்டனர்.

Tags:    

Similar News