உள்ளூர் செய்திகள்

தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

Published On 2023-10-16 07:28 GMT   |   Update On 2023-10-16 07:28 GMT
  • விருதுநகர் அருகே தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
  • அத்திகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

சிவகாசி, தி ஸ்டாண்டர்டு பயர்ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் அமைப்பும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகமும் இணைந்து அத்திகுளம் கிராமப்புற மக்களுக்கு தொழில் முனைவோருக்கான ஒருநாள் விழிப்புணர்வு முகாமை நடத்தியது.

முகாமை அத்திகுளம் தெய்வேந்திரி ஊராட்சி மன்றத் தலைவர் செண்பகமூர்த்தி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர்சுதா பெரியத்தாய் வரவேற்றார். யு.பி.ஏ. ஒருங்கிணைப்பாளர் உமாசங்கரி தொடக்க உரையாற்றினார். விருதுநகரின் டி.ஐ.சி.யின் பொது மேலாளர் ராமசுப்ரமணியன், கிராமப்புற தொடக்கத் தொழில்முனைவோருக்கான டி.ஐ.சி. திட்டத்தை பற்றி பேசினார். அதனைத் தொடர்ந்து வழக்குறைஞர் ராஜகோபால், விருதுநகர் மார்க்கெட்டிங்கில் சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மார்க்கெட்டிங் மேம்படுத்தும் வழி பற்றி பேசினார்.

விரிவுரையாளர் பீட்டர் நிர்மல்ராஜ், பி.ராஜசுரேஷ்வரன் தொழில் வாய்ப்புகள் குறித்து பேசினர். மதுரை மாவட்ட உதவி இயக்குநர் செந்தில்குமார், காந்திகிராம கிராமப்புற நிறுவனம் ஒருங் கிணைப்பாளர் ரவிச்சந்திரன் பேசினர். இதில் மாணவர்கள் மற்றும் அத்திகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை பேராசிரி யைகள் அன்னபாக்கியம், பத்மப்ரியா, கலைவாணி மற்றும் மெர்லின்ராணி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News