உள்ளூர் செய்திகள்

கலைவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவருக்கு கேடயத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி. வழங்கிய காட்சி.

பா.ஜ.க.விற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்-மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டி

Published On 2023-06-29 14:32 IST   |   Update On 2023-06-29 14:32:00 IST
  • வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
  • மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.

விருதுநகர்

விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

பிரதமர் மோடி மதம் சார்ந்த பிரச்சினைகளையே பேசி வருகிறார். வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

மணிப்பூரில் கடந்த 56 நாட்களாக பற்றி எரிகிறது. அதைப்பற்றி அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வெறுப்பு அரசியல் நடைபெறும் இடங்களுக்கு ராகுல் காந்தி நேரில் செல்கிறார். ஆனால் பிரதமர் மோடி அதை தவிர்ப்பதையே வாடிக்கை யாக கொண்டுள்ளார்.

தமிழகத்தில் 2 கோடி குடும்பங்கள் உள்ள நிலையில் ஒரு கோடி குடும்பத்தை சார்ந்த பெண்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. பொருளாதார வல்லுனர் களும் தமிழகத்தில் ஒரு கோடி குடும்பத்தை சார்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்க வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனவே தமிழக அரசு இது ஒரு சிறந்த திட்டமாக உள்ள நிலையில் ஒரு கோடி பெண்களுக்கு மேல் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.

அம்மா உணவகம் உறுதியாக தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட சபையில் தெரிவித்துள்ளார். எனவே அ.தி.மு.க.வினர் அம்மா உணவகத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி பேசும் அண்ணாமலைக்கு அக்கறை இருந்திருந்தால் அந்த காலகட்டத்தில் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசுக்கு எதிராக போராடியிருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ண சாமி, சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம், நகரதலைவர் நாகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. நேரு யுவகேந்திரா சார்பில் நடத்தப்பட்ட இளைஞர் பாதுகாப்பு விழாவில் கலந்து கொண்டு இளைஞர்களுக்கான போட்டிகளை தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் வழங்கினார்.

Tags:    

Similar News