உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

தி.மு.க. ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்

Published On 2022-12-10 07:05 GMT   |   Update On 2022-12-10 07:05 GMT
  • தி.மு.க. ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
  • மக்கள் படும் துயரங்கள் பற்றி கவலைப்படாமல் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊர் ஊராக பவனி வருகிறார்.

ராஜபாளையம்

மின் கட்டணம், சொத்து வரி, பால் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சி பஸ்நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, ஆவின் பால் விலை, சொத்து வரி, தொழில் வரி, வீட்டு வரி,மின் கட்டணம் உள்ளிட்ட விலைவாசி உயர்வு காரணமாக சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எந்த விலைவாசியும் உயர்த்தப்ப டவில்லை. ஆனால் இன்று குடிநீர் வரி மற்றும் கழிவுநீர் வரியையும் உயர்த்தி உள்ளனர்.மக்கள் படும் துயரங்கள் பற்றி கவலைப்படாமல் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊர் ஊராக பவனி வருகிறார்.

பொதுமக்களின் அன்றாட பிரச்சினை குறித்தும், மின் கட்டண உயர்வு குறித்தும் தெரியாமல் ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், சந்திரபிரபா, முன்னாள் அமைச்சர் இன்ப தமிழன், மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாபுராஜ், பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், ராஜபாளையம் வடக்கு நகர செயலாளர் துரை முருகேசன், தெற்கு நகர செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News