உள்ளூர் செய்திகள்

சாலை இணைப்பு குறித்து கருத்து கேட்பு கூட்டம்

Published On 2022-11-02 08:21 GMT   |   Update On 2022-11-02 08:21 GMT
  • சங்கரன்கோவில் -தென்காசி சாலை இணைப்பு குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
  • விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் விவசாய நிலத்திற்கு 3 மடங்கு விலை நிர்ணயம் செய்து தர வேண்டும்.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சங்கரன் கோவில் சாலையில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து புதியாதிகுளம் வழியாக தென்காசி சாலையுடன் இணைப்பு சாலை அமைப்பது குறித்து 2 கி.மீ தூரத்திற்கு நிலத்தை கையகப்படுத்துதல் சம்பந்தமாக விவசாயி களிடம் கருத்து கேட்பு கூட்டம் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

வட்டாட்சியர் சீனிவாசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் ஜானகி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

தமிழக விவசாயிகள் சங்க விருதுநகர் மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா, முன்னோடி விவசாயி தர்மலிங்க ராஜா உள்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருத்துக்களை தெரிவித்தனர். விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் விவசாய நிலத்திற்கு 3 மடங்கு விலை நிர்ணயம் செய்து தர வேண்டும்.

ஏற்கனவே ஆய்வு செய்த தீர்ப்பை நிறுத்தி வைத்து மறு ஆய்வு செய்ய வேண்டும். கையகப்படுத்திய நிலம் தவிர இதர பாசன விவசாயிகளுக்கு பாசனம் மற்றும் இதர வழிமுறைகள் குறித்து விவசாயிகள் விளக்கி கூறினர்.

இதில் திருநெல்வேலி நிலம் கையகப்படுத்துதல் குறித்த உதவி பொறியாளர் பொன் முரளி, விருதுநகர் சிறப்பு தாசில்தார் நிலம் கையகப்படுத்துதல் மாரீஸ்வரன் உள்பட அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News