உள்ளூர் செய்திகள்
- கொலை நடப்பது போல் ரீல்ஸ் செய்து பதிவிட்ட பள்ளி மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
- நீதிபதி மாணவர்களை எச்சரித்து ஜாமீனில் விடுவித்தார்.
விருதுநகர்
சாத்தூரில் உள்ள தனியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
விழா முடிந்த பின்னர் 6 மாணவர்கள் சேர்ந்து பார் ஊழியர் கொலை செய்யப்படுவது போல் நடித்து ரீல்ஸ் செய்து சமூக வலை தளத்தில் பதிவிட்டனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில் மாணவர்களின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது.
இதையடுத்து அம்மாபட்டி போலீசார் அந்த மாணவர்களை கைது செய்து முதல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிபதி மாணவர்களை எச்சரித்து ஜாமீனில் விடுவித்தார்.