உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார். இதில் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமரன், வடக்கு ஒன்றிய செயலாளர் மச்சராஜா, நகர செயலாளர் முகமது நயினார், எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் தங்கமாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற ேதர்தலில் 40 ெதாகுதிகளிலும் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும்

Published On 2023-10-25 13:15 IST   |   Update On 2023-10-25 13:15:00 IST
  • பாராளுமன்ற ேதர்தலில் 40 ெதாகுதிகளிலும் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும்.
  • முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள வடமலைகுறிச்சியில் அ.தி.மு.க. வடக்கு ஒன்றியம் சார்பி் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமரன் தலைமை தாங்கினார். பஞ். தலைவர் விஜயலட்சுமி விவே கானந்தன் முன்னிலை வகித்தார்.

மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தின் ஏழை, எளிய மக்களுக்காக எம்.ஜி.ஆர். தனது ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத் தினார். ஜெயலலிதா ஆட்சி யில் தாலிக்கு தங்கம், இலவச மிக்சி, கிரைண்டர், மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள், லேப் டெப் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி னார்.

எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சி காலத்தில் எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத வகையில் 11 மருத்துவ கல்லூரிகளை தொடங்கினார். நான் கேட்டு கொண்டதற்கிணங்க விருதுநகரில் மருத்துவ கல்லூரி ரூ.385 கோடி செலவில் அமைத்து தந்தார். நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியதையடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை பெற்று தந்தார்.

மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரி கட்டணங்களை அரசே செலுத்தும் என அறிவித்தார். கொரோனா காலத்தில் அனைத்து ரேசன் கார்டு தாரர்களுக்கு ரூ.2,500, 25 கிலோ ரேசன் அரிசி வழங்கினார். விருது நகர் மாவட்டத்தில் 25 மினி கிளினிக்குகள் அமைக்கப் பட்டது.

தி.மு.க. தேர்தல் நேரத் தின்போது நீட் தேர்வை ரத்து செய்வோம். அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும். கல்விக் கடன், நகைக்கடன் ரத்து செய்யப்படும் என அறிவிக் கப்பட்டது. தற் போது ஒரு கோடி பெண்க ளுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட்தேர்வை ரத்து செய்ய வில்லை. கல்விக்கடன், நகைக்கடனையும் ரத்து செய்யவில்லை.

பொய் வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சிக்கு வந்துள் ளது. எனவே பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்தி 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும். எடப் பாடி சுட்டி காட்டு நபரே பிரதமராக வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நகர செயலாளர் முகமது நயினார், கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம் மற்றும் உள்ளாட்சி பிரதி நிதிகள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை மாவட்ட கவுன்சிலர் மச்சராஜா செய்திருந்தார். ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தங்கமாரியப்பன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News