உள்ளூர் செய்திகள்

எடையளவு சட்டத்தின் கீழ் 22 வியாபாரிகள் மீது நடவடிக்கை

Published On 2023-01-29 13:22 IST   |   Update On 2023-01-29 13:22:00 IST
  • எடையளவு சட்டத்தின் கீழ் 22 வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • நுகர்வோர்கள் எடை குறைபாடுகள் தொடர்பான புகார் தெரிவிக்க 04562 - 225130 என்ற தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.

விருதுநகர்

சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழி லாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும், விருதுநகர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில் துணை ஆய்வர்கள் மற்றும் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இறைச்சி, மீன் கடைகள், பழம் மற்றும் காய்கறிக் கடைகளில் எடையளவு சட்டத்தின் கீழ் சிறப்பாய்வு செய்தனர்.

இந்த கூட்டாய்வின் போது எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 3 வியாபாரிகள் மீதும், எடையளவுகள் மறுமுத்திரையி டப்பட்டதற்கான சான்றினை நுகர்வோர் பார்க்கும் வகையில் வெளிக்காட்டி வைக்காத 19 வியாபாரிகள் மீதும் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரை யிடாமல் பயன்படுத்தும் வியாபாரிகளுக்கு, 2009-ம் வருட சட்டமுறை எடை யளவு சட்டத்தின் கீழ் முதல் குற்றச்சாட்டிற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும், 2-ம் மற்றும் அதற்கு அடுத்த குற்றங்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் கோர்ட்டு மூலம் விதிக்க வழிவகை உள்ளது.

நுகர்வோர்கள் எடை குறைபாடுகள் தொடர்பான புகார் தெரிவிக்க 04562 - 225130 என்ற தொலைபேசி எண்ணிற்கோ, தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்), 1/13சி ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகக் கட்டிடம், மாவட்ட கலெக்டர் வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.

சிவகாசி தொழிலாளர் துணை ஆய்வாளர் முத்து, விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மற்றும் உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்கள் தயாநிதி, உமாமகேஸ்வரன், செல்வராஜ், பாத்திமா, துர்கா, முருகவேல் ஆகியோர் இணைந்து கூட்டாய்வு மேற்கொண்டனர்.

Tags:    

Similar News