உள்ளூர் செய்திகள்
சாலையில் அநாதையாக நின்ற வாகனத்தில் 1,200 கிலோ ரேசன் அரிசி
- சாலையில் அநாதையாக நின்ற வாகனத்தில் 1,200 கிலோ ரேசன் அரிசியை கடத்தி வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
- கடத்தி வந்த வாகனத்தை கைப்பற்றி யாருக்கு சொந்தமானது? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே கிருஷ்ணமநாயக்கன்பட்டி பகுதியில் ஒரு வேன் சாலையில் அநாதையாக நின்றது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆல்வின் ரிஸ்ட்மேரி தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது 30 கிலோ கொண்ட 40 மூட்டைகளில் 1,200 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனை கடத்தி வந்த நபர்கள் போலீசாருக்கு பயந்து வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. அந்த வாகனம் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்ததாகும்.
இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரேசன் அரிசி மற்றும் அதனை கடத்தி வந்த வாகனத்தை கைப்பற்றி யாருக்கு சொந்தமானது? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.