உள்ளூர் செய்திகள்

வணிக வளாகம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

ரூ.1.14 கோடியில் வணிக வளாகம் கட்ட அடிக்கல்

Published On 2023-01-14 08:32 GMT   |   Update On 2023-01-14 08:32 GMT
  • ரூ.1.14 கோடியில் வணிக வளாகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
  • 24 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட உள்ளது என்றார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் ரூ.1.14 கோடி மதிப்பில் தினசரி சந்தைக்கான புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நகராட்சி தலைவர் தங்கம் ரவிகண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வமணி முன்னிலை வகித்தார்.

மாநகராட்சிகள், நக ராட்சிகள், பேரூராட்சிகளில் அடிப்படை கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 24 கடை களுடன் கூடிய தினசரி சந்தைக்கான வணிக வளாகம் கட்டுவதற்கு ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக சர்க்கரை குளம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி தலைவர் தங்கம் ரவி கண்ணன் கூறுகையில், நகராட்சியில் வரியற்ற வருவாயை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகர் பகுதியில் நெரிசலை குறைக்கும் வகையில் தினசரி சந்தை அமைப்பதற்காக 24 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட உள்ளது என்றார்.

அடிக்கல் நாட்டு விழாவில் நகராட்சி பொறி யாளர் தங்கப்பாண்டியன், ஒப்பந்ததாரர் குழந்தைவேலு, கவுன்சிலர் மீரா தனலட்சுமி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News