உள்ளூர் செய்திகள்

100 நாள்வேலை திட்ட பயனாளிகள் வாழ்வாதாரம் பாதிப்பு

Published On 2023-11-07 07:58 GMT   |   Update On 2023-11-07 07:58 GMT
  • 100 நாள்வேலை திட்ட பயனாளிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
  • தாங்கள் உடனடி நடவடிக்கை எடுத்தால் அந்த கிராமப்புற ஏழை தொழிலா ளர்கள் பாதிக்கும் நிலை தவிர்க்கப்படும்.

விருதுநகர்

100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு ஊதிய நிலுவையை வழங்க நடவ டிக்கை எடுக்கவேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் பிரதம ருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் முதல் ஊதியப்பட்டு வாடா செய்யப்படாதநிலையில் அவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கடிதம் எழுதி உள்ளேன். ஆனாலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

100 நாள்வேலை திட்ட பணியாளர்களுக்கு மதுரை மாவட்டத்தில் மட்டும் ரூ.87.3 கோடி ஊதிய நிலுவை உள்ளது. விருது நகர் நாடாளுமன்ற தொகுதி யில் ஒவ்வொரு பயனாளிக் கும் குறைந்த பட்சம் ரூ.17, 500 ஊதியம் வரவேண்டிய நிலை உள்ளது. இது எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது.

ஏற்கனவே இதுகுறித்து மத்திய நிதி மந்திரிக்கு கடிதம் எழுதினேன். ஆனால் நான் எதிர்பார்த்த படி இந்த பிரச்சினையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் வாழ் வாதாரம் இழந்து தொடர்ந்து தவிர்த்து வருகின்றனர்.

எனவே தாங்கள் உடனடி யாக இந்த பிரச்சினையில் தலையிட்டு விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகளுக்கு ஊதிய நிலுவையை உடனடியாக பட்டுவாடா செய்யப்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இதில் தாங்கள் உடனடி நட வடிக்கை எடுத்தால் அந்த கிராமப்புற ஏழை தொழிலா ளர்கள் பாதிக்கும் நிலை தவிர்க்கப்படும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News