உள்ளூர் செய்திகள்
ராகுல் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து விழுப்புரத்தில் காங்கிரசார் ரெயில் மறியல்- 110 பேர் கைது
- விழுப்புரத்தில் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- காங்கிரசார் கண்ணன் திரையரங்கம் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.
விழுப்புரம்:
ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து விழுப்புரத்தில் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் இன்று காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி விழுப்புரத்திலும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக காங்கிரசார் கண்ணன் திரையரங்கம் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.
ரெயில் நிலையம் வந்த அவர்கள் புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரெயிலை மறித்தனர்.
போலீசார் அவர்களை கைது செய்தனர். பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர்.