உள்ளூர் செய்திகள்

  அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி. 

மயானத்திற்கு இடம் ஒதுக்க கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-14 15:04 IST   |   Update On 2023-10-14 15:04:00 IST
  • பாலக்கோடு அருகே மயானத்துக்கு இடம் ஒதுக்க கோரி கிராம மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாமல் தவிப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த காவாபட்டி, சுன்னாம்பட்டி, பெருமாள் கோயில்தெரு, பசுமைபுரம், செல்லியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட கிராம பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தனி மயானம் இல்லாததால் கிராமத்தில் யாராவது இறந்து விட்டால் ஆற்று பகுதியில் அடக்கம் செய்து வந்தனர்.

கிராம மக்கள் தொகை அதிகரிப்பால் மயானத்திற்கு போதிய இடம் இல்லாததால் இறந்தவர்களை புதைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் 3 ஏக்கர் உள்ளதாகவும், அந்த இடத்தின் ஒரு பகுதியினை சுடுகாடு, தகன மேடை உள்ளிட்டவைகள் அமைத்து தர பாலக்கோடு தாசில்தார் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர்.

இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கா ததால் மீண்டும் தாசில்தா ரிடம் மனு அளிக்க வந்தனர்.தாசில்தார் இல்லா ததால்ஆத்திர மடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சுடுகாடு அமைக்க இடம் ஒதுக்க வேண்டி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். 

Similar News