உள்ளூர் செய்திகள்

கிராம மக்கள் குடிநீர் எடுக்கும் பள்ளத்தினை படத்தில் காணலாம்.

மரக்காணம் அருகே பள்ளம் தோண்டி தண்ணீர் பிடிக்கும் கிராம மக்கள்

Published On 2023-01-07 09:03 GMT   |   Update On 2023-01-07 09:03 GMT
  • குடிநீர் எடுக்க தண்ணீர் வராததால் பல ஆண்டுகளாக பல சிரமங்களை அடைந்து வருகிறார்கள்.
  • தண்ணீரை பருகும் கிராம மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் மரக்காணம் அருகே எண்டியூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்ப ங்கள் வசிக்கின்றனர். திண்டிவனம் மரக்காணம் செல்ல சாலை ஓரம் உள்ள இப்பகுதியில் வசிக்கும் கிராமத்தில் உள்ளவர்கள் குடிநீர் குழாயின் மூலம் தாங்கள் குடும்பத்திற்கு குடிநீர் எடுக்க தண்ணீர் வராததால் பல ஆண்டுகளாக பல சிரமங்களை அடைந்து வருகிறார்கள்.

இதனால் தங்கள் பகுதி க்கு தண்ணீர் சீராக வருவதில்லை. எனவே தண்ணீர் பிடிப்பதற்கு பள்ளம் தோண்டுகிறார்கள். இந்த தண்ணீரை பருகும் கிராம மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த கிராம த்திற்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதியில் வசிக்கும் குடும்ப த்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News