உள்ளூர் செய்திகள்

லாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள்.

நிலக்கோட்டையில் அனுமதிபெற்று நத்தத்தில் மண் எடுத்து முறைகேடு - லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்

Published On 2022-08-22 04:41 GMT   |   Update On 2022-08-22 04:41 GMT
  • நிலக்கோட்டையில் அனுமதிபெற்று நத்தத்தில் மண் எடுத்து முறைகேடு நடைபெறுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
  • இதனையடுத்து மண் அள்ளிச் சென்ற வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்:

மதுரையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வழியாக திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக மதுரை-நத்தம் இடையிலான 4 வழிச்சாலைக்கு தேவையான மண் லிங்கவாடி பகுதியில் எடுக்கப்பட்டு வருகிறது. தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அருகில் உள்ள சிறிய குன்றின் அடிவாரத்தில் இருந்து ெதாடர்ந்து மண் எடுக்கப்பட்டதால் அப்பகுதி விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது.

இது தொடர்பாக வருவாய்துறை மற்றும் போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. தொடர்ந்து மண் அள்ளப்பட்டதால் மலையின் மேற்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து மண் அள்ளிச் சென்ற வாகனத்ைத சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கும் வாகன ஓட்டுனர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளன் மற்றும் நத்தம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்கள் புகார் அளித்த இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்துள்ள மாலையக வுண்டன்பட்டியில் மண் எடுப்பதற்காக அனுமதி சீட்டை வைத்துக் கொண்டு முறைகேடாக லிங்கவாடியில் மண் எடுத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மண் எடுக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்வதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News