உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ஆண்டிபட்டி அருகே கிராமிய சேவை திட்டம் தொடக்கம்

Published On 2022-06-20 05:09 GMT   |   Update On 2022-06-20 05:09 GMT
  • ஆண்டிபட்டி அருகே கிராமிய சேவை திட்டம் தொடங்கப்பட்டது
  • இதில் 5 மாதங்களுக்கு மனவளக்கலை, யோகா பயிற்சி வழங்கப்பட உள்ளது

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஏத்தக்கோவில் கிராமத்தில் உலக சமுதாய சேவா சங்கமும் ,ஜோஹோ நிறுவனமும் இணைந்து கிராமிய சேவைத் திட்டத்தை தொடங்கியது. தூய்மை, பசுமை மிக்க ஆரோக்கியமான அமைதி கிராமத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது .

இந்த நிகழ்ச்சியில் உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் அருள்நிதி மயிலானந்தன் திட்டத்தை துவக்கி வைத்தார். ஜோஹோ நிறுவனத்தின் அதிகாரிகள் ஸ்ரீதர் மற்றும் ராஜாராம் இயங்கலை ஆகியோர் தலைமை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் மண்டல செயலாளர் அருள்நிதி பாலசுந்தர் வரவேற்றார்.

திண்டுக்கல் மண்டல தலைவர் தாமோதரன் வாழ்த்திப் பேசினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் திட்ட இயக்குனர் முருகானந்தம் திட்டத்தைப் பற்றி விளக்கிப் பேசினார். ஆண்டிபட்டி அறிவுத்திருக்கோயில் தலைவர் ரவி நன்றியுரையாற்றினார். இந்த நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் .திட்டத்தின்படி கிராம மக்களுக்கு 5 மாதங்களுக்கு மனவளக்கலை யோகா பயிற்சி இலவசமாக வழங்கப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

மேலும் திருச்சி அருமை கலைக் காரியாலத்தின் கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்து ஏற்பாடுகளையும் நிறுவனத்தைச் சேர்ந்த கலைவாணி ,புவனேஸ்வரி மற்றும் ஆண்டிபட்டி அறிவுத்திருக்கோயில் நண்பர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News