உள்ளூர் செய்திகள்

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

வில்பட்டி ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்

Published On 2022-08-16 04:52 GMT   |   Update On 2022-08-16 04:52 GMT
  • கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் ஊராட்சித்தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
  • ஊராட்சியில் ஒவ்வொரு திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தொகைகள் முறையாக செலவிடப்பட்டுள்ளதா என்பதை விளக்க கோரிக்கை வைத்தனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் ஊராட்சித்தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் சாலை வசதி, கழிப்பிட வசதி போன்றவற்றை மேம்படுத்த கோரிக்கை வைத்தனர்.

ஊராட்சியில் ஒவ்வொரு திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தொகைகள் முறையாக செலவிடப்பட்டுள்ளதா என்பதை விளக்க கோரிக்கை வைத்தனர்.

நீண்டகாலமாக வில்பட்டியின் பல பகுதிகளில் பட்டா வழங்க தாமதம் ஆவதாகவும் அதை விரைந்து வழங்கவும் வேண்டுகோள் விடுத்தனர். கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும் ஒரு சில பெண்களும் தங்கள் பகுதிகளில் அனுமதி இல்லாமல் மதுபானம் விற்கப்படுவதாகவும் பிரதான சாலையில் வைத்து விற்பதால் பெண்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.

எனவே உடனடியாக அதை அகற்ற வேண்டும் என ஊராட்சித் தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். ஊராட்சித் தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளதாகவும் விரைவில் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரப்படும் என்றும் உறுதி அளித்தார்.

Tags:    

Similar News