உள்ளூர் செய்திகள்

விஜயநகர பேரரசர் காலத்து கல்வெட்டு

திண்டுக்கல்லில் விஜயநகர பேரரசர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு

Published On 2022-07-31 10:52 IST   |   Update On 2022-07-31 10:52:00 IST
  • திண்டுக்கல் மாவட்டம் கோட்டூர் ஆவாரம்பட்டியில் கி.பி. 1478ல் விஜய நகர பேரரசர் தேவமகாராயர் காலத்து கல்வெட்டு, கண்டறியப்பட்டுள்ளது.
  • 12ம் நூற்றாண்டில் திண்டுக்கல்லை பத்மகிரி எனவும், 8ம் நூற்றாண்டில் திண்டீஸ்வரம் என பல்வேறு குறிப்புகள் எழுதப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் கோட்டூர் ஆவாரம்பட்டியில் சின்ராசு என்பவர் தோட்டத்தில் கி.பி. 1478ல் விஜய நகர பேரரசர் தேவமகாராயர் காலத்து கல்வெட்டு, திண்டுக்கல் வரலாற்று ஆய்வுக்குழுவினர் விஸ்வநாததாஸ், ரத்தின முரளிதர், தளிர்சந்திரசேகர் ஆகியோரால் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறியதாவது,

2021 செப்டம்பரில் ஆவாரம்பட்டியில் கல்வெட்டு கிடைத்தது. அதன் முன்புறம் வாமண பகவானின் உருவம் இருந்தது. அந்தகல்வெட்டு திருவிடையாற்றம் எனும் அரிய வகை கல்லால் ஆனது. மைதா மாவை க்கொண்டு தேய்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என படிக்க தொடங்கினோம்.

விஜய நகர பேரரசு காலத்தில் வாழ்ந்த தேவமகாராயர் இங்கு படையெடுத்து வந்தபோது கோயில்ளுக்கு நிலம் தானம் வழங்கியது. வரி விலக்கு கொண்டு வந்தது. திண்டுக்க ல்லில் மாங்கரை, குடகனாறு ஆகிய 2 அணையை கட்டி யிறுப்பது குறித்து கல்வெ ட்டில் குறிப்பிடப்பட்டு ள்ளது. 12ம் நூற்றாண்டில் திண்டுக்கல்லை பத்மகிரி எனவும், 8ம் நூற்றாண்டில் திண்டீஸ்வரம் எனவும் அழைத்துள்ளனர்.

ஆனால் முதன் முதலில் திண்டுக்கல் சீமை என்று அச்சிடப்பட்டிருந்தது. குறிப்பாக இந்த கல்வெட்டை சேதப்படுத்தினால் வாரிசு இருக்காது. குடும்பத்தில் நல்லது நடக்காது என்னும் சாப வார்த்தைகளும் பொறிக்கப்பட்டி ருந்தது. இதை முழுமையாக படித்து முடிக்க 1 வருட காலம் முடி ந்தது. அந்த பகுதி இளைஞ ர்களும் உதவி செய்தனர். ஆய்வு தொடர்ந்து நடை பெற்று க்கொண்டிருக்கிறது என்றனர்.

Tags:    

Similar News