உள்ளூர் செய்திகள்

பெண்களுக்கான தொழிற்பயிற்சி நிறைவு விழா- விஜய் வசந்த் எம்.பி. சான்றிதழ் வழங்கினார்

Update: 2022-12-05 13:58 GMT
  • தேன் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் சந்தைப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது
  • நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை மாறப்பாடியில் உள்ள பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு சங்கத்தில் (WEEDS) உள்ள பெண்களுக்கு நபார்டு (NABARD) ஆதரவில் குறு நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் (MEPD)கீழ், தேனி வளர்ப்பு, தேன் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி நிறைவு விழா மற்றும் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழச்சியில் விஜய் வசந்த் எம்.பி. கலந்துகொண்டு பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங், பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு சங்க இயக்குனர் சார்லஸ், திருவருள் பேரவை குழு மரியவின்சென்ட் மற்றும் பீரவின்குமார், ஜூலியட், சுலோச்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News